Sunday, July 22, 2007

கண்ட நாள் முதலாய்

தேயாத வெண்ணிலா
   கலயாத வானவில்
வாடாத வாசமலர்
   இவையெல்லாம் இருக்குமென்று
நானும்தான் நம்பவில்லை - பெண்ணே
   உன்னை காணும்வரை!

எழுதி விடு

எழுதி விட்டு
எங்கோ போகும்
எழுதுகோல் பொன்றது
பெண்ணின் இதயம் - அதை

அழிக்க முயன்றால்
கிழிந்தே போகும்
காகிதம் போன்றது
ஆணின் இதயம்!

Labels: ,